அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் இன்று முன்னெடுக்கின்ற போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மற்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்திருந்தது.
இதற்கமைய கொழும்பில் தற்போது அரசாங்க நிர்வாக அதிகாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.