பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பொக்ஸ்ஸில் (box) இறுதியாக சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டிய சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
தனது முகப்புத்தகத்தில் இது தொடர்பில் அந்த பெண் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
‘ஏப்ரல் 27 அன்று, நாங்கள் கிஸ்ட் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடித்தோம், இறுதியாக இருந்த பானத்தை ஊற்றும்போது ஏதோ அசாதாரணமானதாக உணர்ந்தேன்.
அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை வெட்டி திறந்து பார்த்தேன், அப்போது “பச்சை ஆப்பிளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று பொக்ஸ்ஸில் இருந்ததிலிருந்து இருக்கக்கூடாத ஒன்று இருந்தது.
உடனடியாக புகார் செய்ய அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பில் வினவினேன்.
இதன்போது எனக்கும் என் சிறிய குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க திங்கள் வரை காத்திருக்கும்படி அவர்கள் என்னை கேட்டுகொண்டனர்.
நான் காத்திருக்கும் அளவுக்கு அன்பாக இருந்தேன், ஆனால் இன்னும் அவர்கள் அழைப்பை ஏற்படுத்தவில்லை. அவர்கள் தங்கள் நுகர்வோரின் வாழ்க்கையை எவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள்.
நான் இன்னும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.