தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர்கள் இருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.