கிராம உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான சம்பள திட்டத்தை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 06,07 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை சமர்பித்தாலும் இது வரை எந்தவிதமான தீர்வும் எமக்கு வழங்கப்படவில்லை என்பதும் பின்வரும் பிரச்சனைகளும் பிரதானமாக காணப்படுகின்றன.
இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவை நிறுவப்படாமை, தனித்துவமான சம்பள திட்டத்தை வழங்காமை, மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள பொதுச்சேவையை பேணுவதற்கு
கிராம அலுவலகர்களுக்கு உத்தியோகபூர்வ கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை மற்றும் பெறப்படும் சம்பளத்திற்கு கடமைகளை செய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது (2005 பட்ஜெட் முன்மொழிவுகள் வரை முன்மொழியப்பட்ட எரிபொருள் மற்றும் சீரான கொடுப்பனவு வழங்கப்படாமை நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறி பிரதேச நிருவாகத்தினரால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை, எடுத்துக்காட்டாக அதிகரித்துவரும் வாழ்க்கை செலவுகளுக்கு முகம்கொடுத்து எங்கள் அதிகாரிகளின் உயிரை துச்சமாக மதித்து கடமைகளை செய்யவைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக எங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் வாழ்விற்காக இனியும் காத்திருக்க வேண்டாம், எங்கள் சேவையில் உள்ள பிரச்சனைகள் எங்கள் சங்கம் உட்பட நான்கு முக்கிய கிராம அலுவலகர்கள் சங்கங்கள் இணைந்து தொழில் சங்க நடவடிக்கையை நாடுவது பொருத்தமானது என்று முடிவு செய்துள்ளன.
அதன்படி 8.52004 இற்கு முன்னும் இரண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளை செயல்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.
மேலும் மே இற்கு முன் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு பின்வருமாறு தெரிவிக்க விரும்புகின்றோம்
எதிர்வரும் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் சுகயீன லீவு அறிக்கையிட்டு அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கான தொழில் சங்க நடவடிக்கைகளை தொடங்குதல் இதன் மூலம் அனைத்து கடமைகளையும் விட்டுவிட்டு சுகயீன வீவு அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இரண்டு நாட்களிலும் எந்த ஒரு கடமையிலும் ஈடுபட வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம். அந்த இரண்டு நாட்களிலும் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அழிக்காமல் இருப்பது நல்லது என்பதை நினைவில் கொள்ளவும்
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மே 8ம் திகதிக்கு பிறகு கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்ற 08 இற்கு பிறகு எடுக்கப்படும் தொழிச்சங்க நடவடிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அதன்படி ஏனைய கிராம அலுவலகர் சங்கங்களும் இந்த நடவடிக்கைகள் குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவித்து வருவதால், இந்த இரண்டு நாட்களிலும் சங்கப்பாகுபாடினறி ஒரே குழுவினராக வலுவாக செயற்பட்டு சேவையின் நிலை மற்றும் முன்னேற்றத்திற்காக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடங்க உறுதியளித்துள்ளனர். ஆகையால் அனைவரும் கடினமாக உழைத்து வெற்றி பெறும் வரை உறுதியாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். சுகயீன விடுமுறை அறிவித்த பின்னர் எந்த ஒரு தரப்பினருடனும் மோதல் அல்லது தகராறு செய்யகூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்ட தொழில்சங்க நடவடிக்கையை செயற்படுத்துவது அனைத்து உறுப்பினர்களினதும் பொறுப்பு என்பதை நாங்கள் மேலும் தெரிவித்து கொள்கின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.