வவுனியாவில் பாடசாலையொன்றின் அதிபரை பெற்றோர்கள் பல்லக்கில் சுமந்து கௌரவம் அளித்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் திருமதி.கமலா சொக்கலிங்கம் என்பவர் அதிபர் பணியில் இருந்து ஓய்வு பெற்வுள்ள நிலையில் குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் அவரை பல்லக்கில் சுமந்து சென்று கௌரவப்படுத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த அதிபர் தனது பாடசாலையை மாகாணமே வியந்து பார்க்கும் பாடசாலையாக பெருமாற்றத்தை நிகழ்த்திக்காட்டிய சாதனைப் பெண்ணாகத் திகழ்ந்தமைக்கு வாழ்த்து தெரிவித்தே பெற்றோர்கள் அவரை கௌரவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த அதிபரின் மணிவிழா நிகழ்வானது எதிர்வரும் திங்கள் கிழமை பாடசாலையில் இடம்பெறவுள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.