நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இரு இளைஞர்கள் பரிதாப மரணம் – இலங்கையில் பயங்கரம்

 

நவரோஹல –  கிம்புலாவல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், 

எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் ஜயவர்தனபுர மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *