ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வாரம் குறித்த அரசியல்வாதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திவரும் இவர், இதற்கு முன்னர் பல அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு என்ன அமைச்சு பதவி கிடைக்கும் என்பது இதுவரை வெளியாகவில்லை.