போகம்பர சிறைச்சாலையை ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் தொன்மையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போகம்பர சிறைச்சாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 2014 ஆம் ஆண்டு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது.
அந்த அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.