சம்பள அதிகரிப்பு, சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிரான் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை(06) சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த போராட்டம் நாளையதினமும் இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.