ஜனாதிபதி நிதியத்தினால் மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம்

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணிகளுக்கும் ஏனைய மாணவர்களுக்கும், 

க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்குமான புதிய புலமைப் பரிசில் வேலைத்திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கான 822 கற்கை நிறுவனங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, 

இதற்காக மேற்படி கற்கை நிறுவனமொன்றுக்கு 06 புலமைப்பரிசில்கள் என்ற அடிப்படையில் நிறுவனத் தலைவர்களின் பரிந்துரைக்கமைய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர்.

இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் பிரிவெனாக்களில் கற்கும் 5000 வறிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதோடு, முதல் கட்டத்தின் கீழ் 2024 மே மாதம் தொடக்கம் 12 மாதங்களுக்கு 3000 ரூபாவும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 24 மாதங்களுக்கு 6,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *