திருகோணமலையில் நீண்ட நாட்களின் பின்னர் இன்றையதினம்(08) கனமழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர், சம்பூர், கிளிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(08) காலை முதல் கனமழை பெய்துவருகின்றது.
நீண்ட நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் இவ்வாறு மழை பெய்துள்ளமைமையால் பொதுமக்கள் கடும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.