மன்னாரில் காணி உறுதிபத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு..!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இவ் ஆண்டில் இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்  பூரண அளிப்பு வழங்கும் திட்டத்தின்    கீழ் காணிகளை பதிவு செய்யும் நிகழ்வு இன்றையதினம் சாந்திபுரம் மற்றும் செளத்பார் கிராமங்களில் இடம் பெற்றுள்ளது.

நீண்டகாலமாக அரச காணிகளில் தற்காலிக காணி ஆவணங்களுடன் வாழ்ந்து வரும் மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டும் குறித்த செயற்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசத்தில் நடமடும் சேவை ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பிணக்குகள் இன்றி உரிமையாளர் மாற்றம் ஏதும் இடம் பெறாதா காணிகளின் உரிமையாளர்களுக்கு விரைவாக பூரண அளிப்பு வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் பூரண அளிப்பை பெற்றுக்கொள்ளகூடிய விதமாக எந்த ஒரு பிணக்குகளும் அற்ற உரிமை மாற்றம் செய்யப்படாத தற்காலிக காணி ஆவணங்களை கொண்டுள்ள காணி உரிமையாளர்கள் தற்காலிக காணி பத்திரத்தின் மூலப்பிரதி,பிறப்பு சான்றிதல்,திருமண சான்றிதல்,அடையா அட்டை பிரதி என்பவற்றை சமர்பித்து பூரண அளிப்புக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *