ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை ஆனி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல பிரேரணைகள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர குறிப்பிட்டார்.
தென்னிலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில் சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பலரும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.