மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டியானது பெரிய கடை ஸ்ரார் ஈகிள்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 18,19 ஆம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது
மாவட்ட ரீதியாக 16 அணிகள் தெரிவு செய்யப்பட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் குறித்த சுற்றுப்போட்டியானது இடம் பெறவுள்ளது
குறித்த போட்டியில் முதல் இடத்தை பெறுகின்ற அணிக்கு வெற்றி கிண்ணம் மற்றும் 50000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தை பெறுகின்ற அணிக்கு 30000 பணப்பரிசும் வழங்கி வைக்கப்படவுள்ளது அதே நேரம் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதும் வழங்கப்படவுள்ளது
அரச தனியார் நிறுவனங்களுக்கு இடையில் லீக் முறையில் முதல் முறை இடம் பெறும் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.