கொழும்பு தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் எனும் சாகச நிகழ்வில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
தாமரை கோபுரத்தில் இருந்து பேஸ் ஜம்ப் பாய்ச்சலின் போது பரசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காயமடைந்த வெளிநாட்டு பிரஜை அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.