பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் சம்பள உயர்வினை வழங்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று(13) நடைபெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்று(13) காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.