எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றியை எவராலும் தடுக்கமுடியாது என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவார்.
இவர்கள் மூவருமே பிரதான வேட்பாளர்கள், இவ்வாறு ஜனாதிபதி தேர்தலின்போது மும்முனைப் போட்டி நிலவும் என்பதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்.
இதுவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி வாய்ப்பாக அமையும். எனவே, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.