ஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில், பலம் வாய்ந்த ஈரானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணியான ஈரான் அணிக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்த இலங்கை வீரர்கள், போட்டியின் முதல் சுற்றில் 25-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில் 25-17 மற்றும் 25-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

தற்போதைய வலைப்பந்தாட்ட தரவரிசையின்படி இலங்கை அணி 60வது இடத்தில் இருப்பதுடன், இலங்கையிடம் தோல்வியடைந்த ஈரான் அணி 15வது இடத்தில் இருப்பது சிறப்பு.

இப்போட்டியில் இலங்கை வீரர்கள் பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். இதற்கு முந்தைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி போட்டியின் முதல் வெற்றியை தனதாக்கியது.

ஈரானுக்கு எதிராக வலுவான வெற்றியைப் பெற்ற இலங்கை அணி, ஆரம்பச் சுற்றின் அடுத்த போட்டியில் இன்று துருக்மெனிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *