
சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் இடம்பெற்றது. கட்டார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கான நிரந்தரக் குழு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றிருந்தனர்.