சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ‘பென்ரைவ்’களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 12 மற்றும், கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 59 மற்றும் 24 வயதுடைய இரண்டு வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (17) அதிகாலை 4.55 மணியளவில்,டுபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இருவரும் தங்களது பயணப்பொதிகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர்களிடம் இருந்து 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்டிரைவ்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.