ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆளுநர் அலுவலகத்தில் துறைசார் தரப்பினர்களுடன் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் இடம்பெறவுள்ள இடங்களையும் இன்றையதினம்(17) நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.