களுத்துறை – அகலவத்தை பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது காதலி மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் 18 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியை பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளையிலேயே அவர் கடத்தப்பட்டதாகவும்,
முறைப்பாடு கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இளைஞனை அவரது காதலியின் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த இளைஞனை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன்,
சந்தேக நபரின் காதலி மற்றும் அவரது தந்தை மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.