பெண் ஒருவர் தேங்காய் பறிக்க சென்ற போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹொரணை, மிவனபலன பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
பலத்த காற்று வீசியதால் மின்கம்பி மீது மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண்ணுக்குச் சொந்தமான காணியில் தேங்காய் பறிக்கச் சென்ற போதே இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஹொரணை பதில் நீதவான் சட்டத்தரணி காந்தி கன்னங்கர பார்வையிட்டதன் பின்னர் சடலம் சட்ட வைத்திய பணிகளுக்காக ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.