திருவடி நிலையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்…!சபா.குகதாஸ் விடுத்த வேண்டுகோள்…!

சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் கடற்படைக்கு முகாம் அமைப்பதற்காக அங்குள்ள தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

சங்கானைப்  பிரதேச செயலக எல்லைக்குள் J/172,  J/174 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்படையினர் தங்கள்  முகாமை நிரந்தரமாக அமைப்பதற்கு நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன் தனியார் காணிகளை சுவீகரிக்க எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு களத்தில் இறங்கவுள்ளனர்.

இந்த சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுக்க  காணிகளுக்கு சொந்தமான பத்திரங்களை வைத்திருக்கும்  உரிமையாளர்கள் தடுத்து நிறுத்த தயாராகுங்கள்.

சுவீகரிக்க தயாராகும் பகுதி மத அடையாளங்களையும் , அதன் புனித தீர்த்த பகுதிகளையும் மக்களின் இறந்த உடலங்களை எரிக்கும் சுடுகாடுகளையும்  மீன்பிடித் தொழிலை செய்வோருக்கான கடலோரத்தையும் சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்குக்கான பிரதேசமாகவும்,  தனியார் காணிகளை கொண்டிருப்பதாலும் கடற்படை முகாம்களை நிரந்தரமாக அமைப்பது ஏற்புடையதல்ல எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *