முதலில் தமிழிழ் தேசிய கீதம் இசைப்பதற்கு அனுமதித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – காதர் மஸ்தான் தெரிவிப்பு

முதல் முதலில் தமிழிழ் தேசியகீதம் இசைப்பதற்கு  அனுமதித்தவர்  தற்போதய ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 14 வேலை திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட  போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி, பொது நோக்கு மண்டபங்கள் பகுதி திருத்தம் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் என 14 வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பகுதியில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் புனரமைப்பு செய்யப்படாத வீதிகளை புனரமைப்பதற்கான ஆரம்பப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆரம்பித்து வைத்தார். 

இதன் போது கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது,  

இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பது தொடர்பாக பதிலளிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பலரும் பல விதமான விமர்சனங்களை தெரிவிக்கலாம். 

இருந்த போதிலும் இலங்கையின் அரசியல் அமைப்புக்கு அமைவாக எதனையும் இவராலும் மாற்ற முடியாது. 

பலரும் பல விதமான கருத்துக்களை விமர்சனங்களை தெரிவிக்கலாம். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அல்லது வேறு யாராவது போட்டியிட்டாலும் கூட தாம் சரியான ஒருவருக்கு முழுமையான ஆதரவை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *