மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் சிறுவன் ஒருவரை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான சிறுவனின் தாயார் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவனின் தாயாரும், அவரது சகோதரரும் நேற்றைய தினம் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறிதத சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தமிழரான குறித்த தாயார் திருமணம் முடித்த பின்னர் கணவரைவிட்டுவிட்டு அவருக்கு பிறந்த குழந்தையுடன் முஸ்லீம் மதத்திற்கு மதம்மாறி முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.
பின்னர் அவரை விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து அவருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அவரையும் விட்டுவிட்டு இரு பிள்ளைகளுடன் மீண்டும் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வந்து தங்கி வாழ்ந்து கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த ஏப்பிரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
இரண்டாவது, இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தகப்பனான புத்தளத்தைச் சேர்ந்தவருக்கு தெரியவந்ததையடுத்து அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில், சிறுவனை தரமுடியாது என அவர் மறுத்துள்ளார்.
மேலும் தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிசார் குறித்த தாயாரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, இரு சிறுவர்களை துன்புறுத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது