நாட்டில் புகைத்தல் பாவனை காரணமாகத் தினசரி 50 மரணங்கள் பதிவாகுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் புகைத்தல் பாவனை காரணமாக வருடத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் புகைத்தல் பாவனை காரணமாக 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் புகைத்தல் பாவனையாவார்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும் 1.5 மில்லியன் பேர் புகைத்தல் பாவனை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.