2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக் கிழமை பிற்பகல் வெளியாகியுள்ளன. இதில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்
அத்துடன் 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இதேவேளை – பரீட்சை மீளாய்வு செய் வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.