கல்வி என்பது நிலையான சொத்து. அதை எப்போதுமே எம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் சொற்படி கேட்டு செயற்படும்போதே சிறப்பான நிலையை அடைய முடியும் என உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஜெயசீலன் சுமன் தெரிவித்தார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த ஜெயசீலன் சுமன் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 28 வது இடத்தையும் பிடித்துள்ளார்.
தான் எதிர்காலத்தில் ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப நெறி கற்கையை தெரிவித்து சாதிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் சாதாரண தரம் வரை புற்றளை மகா வித்தியாலயத்தில் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு மாணவனான செல்வச்சந்திரன் ஶ்ரீமன் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 10வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.