இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐவரின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை.
மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் என 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 119 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 ஆயிரத்து 706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
களுகங்கை, நில்வளா கங்கா மற்றும் கிங் கங்கை ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருகின்றது. இதனால் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அனர்த்தங்கள் இடம்பெறும் பகுதிகளைப் பார்வையிடச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.