வேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை!

வேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வேல்ஸில் இன்னும் அதிக கொவிட் தொற்று வீதத்தைக் கொண்ட ரெக்ஸ்ஹாம், அதன் 18 முதல் 29 மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர், முதல் டோஸை எடுத்துக் கொள்ளவில்லை.

பொது சுகாதார வேல்ஸ் புள்ளிவிபரங்கள் டென்பிக்ஷைர் மற்றும் க்வினெட் ஆகியோர் இளைய வயதினரை அடைவதில் சராசரியை விடக் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன.

மொத்தத்தில், 30 வயதிற்குட்பட்டவர்களில் 26.6 சதவீத பேருக்கு ஒரு டோஸ் வழங்கப்படவில்லை.

18 முதல் 29 வயதிற்குட்பட்ட 127,658பேர் இன்னும் முதல் அளவை பெறவில்லை. இது 30 வயதிற்குட்பட்டவர்கள் சேர்க்கப்படும்போது இது 232,152ஆக உயர்கிறது.

Leave a Reply