முல்லைத்தீவு- செல்வபுரத்தில் ஆணொருவர் சடலமாக கண்டெடுப்பு

முல்லைத்தீவு- முறிகண்டி, செல்வபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், ஆணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரான (61 வயது) குஞ்சுமோகன் அசோகன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சடலமாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிள்ளைகள் தொழில் நிமித்தம் வேறு பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் சம்ப இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலையில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply