பருத்தித்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.பருத்தித்துறையில் இன்று நடத்தப்பட்ட அன்ஜன் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறினர்.

பருத்தித்துறை நகரம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் வங்கிகள், தபாலகங்கள் மற்றும் நகரசபை உள்ளிட்ட அலுவலகங்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவற்றில் பணியாற்றும் 66 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Advertisement

அவர்களில் இருவர் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் எனவும் மற்றய இருவரும் பருத்தித்துறை நகரசபை ஊழியர்கள் எனவும் கூறப்படுகின்றது.

இதனோடு பருத்தித்துறையில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்திருக்கின்றது.

Leave a Reply