தபால் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,
இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏனைய அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.