நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனில் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்…! அநுர சுட்டிக்காட்டு…!

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தகர்களுக்கும் இடையிலான  கலந்துரையாடல் கூட்டம் நேற்று (12) மாலை காரைதீவில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின்  பெருமளவிலான தமிழ் பேசும் கரையோர வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் பல வர்த்தகர்கள் இங்கு  பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில்  முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களது நாடானது பொருளாதாரத்தில் ஒதுக்கப்பட்ட வீழ்ச்சி அடைந்த நாடாக இருக்கின்றது.

வாங்கிய கடனை செலுத்த முடியாத ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம். தொழில் வல்லுனர்களுக்கு இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் ஏன் இனவாதத்தை கொண்டு வருகிறார்கள் ? எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதவிடத்து, பிள்ளைகளுக்கு தொழில் ஒன்றை வழங்க முடியாதவிடத்து,  மீனவ சமூகத்தினுடைய பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் அவர்கள் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவார்கள். இந்த இதனவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து சிங்கள மக்களுக்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று சொல்வார்கள்.  

ஆகையினால் இந்த நாட்டை சிறப்பாக கட்டி எழுப்புவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை யாருக்கு உருவாக்கலாம். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒற்றுமை தேவை இல்லையா ?

தேசிய ஒற்றுமை தேவை இல்லையா ? அதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். அது தேவை இல்லை என்றால் வேறு கட்சிகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள். வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறைய பேர் இங்கே இருக்கின்றீர்கள்.

நீங்கள் அனைவரும் மக்களை சந்திக்கிறீர்கள். கலந்துரையாடுகின்றீர்கள். நீங்கள் சொல்வதை மக்கள் கேட்பார்கள். இன்னும் இரண்டரை மாதங்கள் தான் இருக்கின்றது. எல்லோரும் சேர்ந்து கதைப்போம். தெற்கைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் மாற்றம் உருவாக வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *