சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5 ஆவது தீடைப் பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் குறித்த சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

தலைமன்னார் பொலிஸார் குறித்த தீடைப்பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அத்தோடு இச் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply