இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாயம் இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என, ஸ்ரீலங்கா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பாணந்துறை – அலுபோமுல்ல மற்றும் ஹிரன பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையங்களைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
கொள்ளையர்கள், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோர், பாதாள உலகக்குழுவினர், போதை பொருள் கடத்துபவர்கள் போன்றோர் இருக்கும் வரை அச்சமும், சந்தேகமும் இல்லாமல் இந்த சமுதாயத்திலே வாழமுடியாது. ஆகவே அவற்றை முதலில் ஒழிக்க வேண்டும்.
மேலும் அப்படி ஒழித்து மக்கள் நிம்மதியாக, அச்சமின்றி வாழ கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.
அத்தோடு 18 வயதிற்கு மேல் அனைவருக்கும் ஆயுத பயிற்சி வழங்க வேண்டுமென நான் நாடாளுமன்றத்தில் கூறியபோது என்னை கேலி செய்தார்கள்.
இராணுவ பயிற்சி என்பது எல்லோரும் நினைப்பதை போல் இராணுவ வீரராகும் செயற்பாடு அல்ல. 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கு சிறந்த இடம் இராணுவ முகாம்களே. அங்குதான் ஒழுக்கமும், அனைத்து வசதிகளும் காணப்படுகின்றது. அதனால் தான் அங்க பயிற்சியை வழங்க தீர்மானித்தோம்.
மேலும் தலையமைத்துவ பண்பையும், ஆளுமை திறனையும் வளர்க்கும் முகமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், இராணுவ பயிற்சியை வழங்கினால் நிச்சிமயமாக ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
[embedded content]
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்: