முப்பது கூரைகளை நாசமாக்கிய மினிசூறாவளி

மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி குடா, முனைக்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை வீசிய மினி சூறாவளியினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் 28 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார். இதன்போது, மக்கள் அச்சமடைந்த நிலையில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலைமையை நேரில் கண்டறிவதற்காக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேற்று (16) விஜயம் செய்திருந்தனர்.

Leave a Reply