இலங்கையில் கொரோனா தொற்றால் 10 சிறுவர்கள் உயரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளன நிலையில் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி நிலையில் அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளதென வைத்தியசாலை இயக்குனர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ரிட்ஜ்வே வைத்தியசாலையினுள் மாத்திரம் 490 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் எந்த ஒரு கொரோனா தொற்றாளரும் வைத்தியசாலையினுள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை.

Advertisement

சமூகத்திலேயே அவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 10 சிறுவர்கள் இதுவரையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply