அரசியல் நோக்கத்திலா தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டன? – அமெரிக்கா விளக்கம்

இலங்கைக்கு தருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பின்னணியில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் நேற்று (16) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த ஒரே நோக்கத்திலேயே இலங்கைக்கு 1.5 மில்லியன் மொடெர்னா தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முக்கியமாக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் சமுகத்துக்கு உதவி வழங்கியமைக்காக அமெரிக்காவிற்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply