இங்கிலாந்தின் (Ellie Mason) எல்லி மேசன் என்பவரின் நான்கு வயது மகள் (Rosie-May ) ரோஸி-மே பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரது பெற்றோர் தற்போது, பட்டாசு வெடிப்பு ஆபத்து குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
இதேவேளை, பட்டாசு வெடிப்பதால் கடுமையாக காயமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக குழந்தைகள் தீக்காய அறக்கட்டளையின் தரவுகள் கூறுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் வரையிலான ஆண்டின் புள்ளிவிவரங்கள் கூறுகையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 40 குழந்தைகள் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும், தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டதாகவும் காட்டுகின்றன.
இது கடந்த ஆண்டு இதே புள்ளியை விட நான்கு மடங்கு அதிகம் என்பதுடன் இது 2014 க்குப் பின்னர் கடுமையான காயங்களுக்கு ஆளான குழந்தைகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பாகும்
கடந்த 2018 ஆம் ஆண்டில் பட்டாசு ஒன்று வழிதவறி தாக்கியபோது ரோஸி-மேக்கு நான்கு வயது, எனவும் அவளுக்கு தோல் ஒட்டு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் ஐந்து வார சிகிச்சை தேவைப்பட்டது எனவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரோஸி-மேக்கு 12 வயது அனா நிலையில் பட்டாசு வெடிப்பு ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவள் விரும்புவதாக அவரது தாயார் கூறுகிறார்.
இதேவேளை, ரோஸி-மே பட்டாசை பார்த்து மிகவும் பயப்படுவதாகவும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொது பட்டாசுகள் கொளுத்துவதால் அவளுக்கு அது விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.






