இந்தியாவிற்கான இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக, இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்துடன் (NPCI) இணைந்து, டெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இன்று UPI One World திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடி டிஜிட்டல் கட்டண வசதி, இலங்கை பயணிகள் இந்திய மொபைல் எண்ணின் தேவை இல்லாமல் நாடு முழுவதும் பாதுகாப்பான, நிகழ்நேர பணம் செலுத்த உதவுகிறது.
இது பணத்தை எடுத்துச் செல்வதற்கு நவீன வசதியான மாற்றீட்டை வழங்குகிறது.
புது டெல்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், பெளத்த யாத்ரீகர்கள் ஓய்வு நிறுவனத்தின் நிர்வாகச் செயலாளர் பெரகம விமல புத்தி தேரர், NPCI இன் மத்திய அரசு உறவுகள் துறை பொறுப்பாளர் ரவி காந்த் சர்மா மற்றும் NPCI இன் UPI வளர்ச்சி துறை பொறுப்பாளர் விவேக் கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வசதி மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கும் பயனளிக்கும்.
மேலும் அவர்கள் தங்கியிருக்கும் போது அதிக நிதி நெகிழ்வுத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்கும்.
இலங்கைப் பயணிகளுக்கு UPI One World அறிமுகப்படுத்துவது அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதிலும், மக்களிடையேயான இணைப்பை எளிதாக்குவதிலும் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது.





