
நாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகரசபையின் வைத்தியர் தினூக குருகே தனது ருவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதற்மைக, நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரையில் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




