யாழில் இன்றும் கொரோனாவுக்கு ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 113 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவெளை அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,402 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply