உகண்டாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 104ஆவது நாடாக விளங்கும் உகண்டாவில் இதுவரை இரண்டாயிரத்து 353பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 417பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 20ஆயிரத்து 924பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 849பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 67ஆயிரத்து 114பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *