வியாழேந்திரன் மற்றும் பிள்ளையானை விவாதத்துக்கு வருமாறு ஆசிரியர் சங்கம் பகிரங்க அழைப்பு

கல்வி தொடர்பாக பேசுவதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு பொதுச்செயலாளர் பொன்.உதயரூபன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு டப் வழங்கும் செயற்றிட்டமானது நீண்டகாலமாக உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  அதனை அரசியல் நிகழ்வாக செயற்படுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலசவ கல்வியை வியாபாரமாக நடாத்திய வியாழேந்திரனும் பல கல்விமான்களை கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றிய பிள்ளையானும் கல்விக்கொள்கைக்கு முரணாக இந்த டப்களை தாங்கள் வழங்கிதாக கூறியுள்ளமைக்கும் கடுமையான கண்டனத்தை வெளியிடுகின்றோம் எனவும் உதயரூபன் கூறியுள்ளார்.

Leave a Reply