வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

<!–

வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு – Athavan News

சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம், வவுனியா- கண்டி வீதியிலுள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்ப்பாட்டில்  நடைபெற்ற குறித்த நிகழ்வில் அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன், விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை ஆற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர், நகரசபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Leave a Reply