யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்கள் விடுதலை

யாழ். மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் இன்றைய தினம் (19) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

அச்சுவேலி, இளவாலை, கோப்பாய் மற்றும் கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலைய பகுதிகளைச் சேர்ந்த 5 சந்தேக நபர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply