
கொழும்பு, ஏப் 08
நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ சற்றுமுன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அனுமதியுடன் உரையாற்றிய ஹரீன் , நாட்டின் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினாலும் தீர்வு கிடைக்காத காரணத்தினால் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுவதை தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார்.