
சபையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்:
நாட்டில் இன்று என்ன நடக்கிறது. இதற்கு யார் பொறுப்பு. யார் பதில் கூறுவது. நாம் எல்லாவற்றுக்கும் தயாராகவே உள்ளோம். நாட்டை நடாத்தவும் தயார். மக்களின் பேச்சுக்கு மட்டுமே நான் தலை சாய்ப்பேன். இங்கே ஆளும் தரப்பு அதற்கு மாறாக நடந்துகொள்கிறது.
நல்லது செய்யாவிடின் நான் ஓய்வு பெறவும் தயார். நல்லது செய்ய வேண்டும் இல்லையென்றால் விலக வேண்டும். இல்லையென்றால் நாம் நம்பிக்கை இல்லா பிரேரணை நாம் கொண்டு வருவோம்.
225 பெரும் மேலே இருந்து குதிக்கவில்லை. மீண்டும் உங்கள் தொகுதிக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம்.- என்றார்.